காவிரி விவகாரத்தில் பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை ஆர்.கே.,நகர் சாலையில், கர்நாடக மாநிலத்தவர் நடத்தி வரும் நியூஉட்லண்ட்ஸ் ஹோட்டல் மீது இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து வீசப்பட்டது.

இதில் ஓட்டல் கண்ணாடிகள் உடைந்தன.
தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் வீசி சென்றனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel