பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகையில் கன்னட மொழியிலான அறிவிப்பு இடம்பெற தொடங்கியுள்ளது.

விமான வருகை மற்றும் புறப்பாடுகளை அறிவிக்கும் வகையில் விமானநிலையங்களின் நுழைவு வாயில் பகுதியில் டிஜிட்டல் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே அறிவிப்பு இடம்பெறும்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கன்னட வாடிக்கையாளர் சங்கத்தின் அமைப்பான கன்னட கிரஹக்கரா கூட்டா இந்த தகவல் பலகையில் கன்னட மொழியில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தது. இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது.
கடந்த 2016ம் ஆண்டு தினேஷ் குண்டு ராவ் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது கவனத்துக்கு கொண்டு சென்றது. இதில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது என்று அந்த அமைப்பும், தினேஷ் குண்டு ராவும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.