
கடந்த சில மாதங்களாகவே புதுமுக இயக்குனர்கள் பலர் சென்சார் அதிகாரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கஷ்டப்பட்டு படத்தை எடுத்து அதை சென்சாருக்கு அனுப்பினால் அசால்டாக யு/ஏ கொடுத்துவிடுகிறார்கள். தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க கூடாது என்பதற்காகவே சென்சார் அதிகாரி மதியழகன் இப்படி செய்து கொண்டிருப்பதாக பலர் குற்றம் சாட்டினர்.
இன்று ‘கன்னா பின்னா’ படக்குழுவினர் தங்களது படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்க கோரி சென்சார் அதிகாரி மதியழகன் அவர்களை எதிர்த்து சென்னை சாஸ்திரி பவனில் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இயக்குனர் தியா, தயாரிப்பாளர்கள் ரூபேஷ்.P, E.சிவசுப்பிரமணியன் & K.R.சீனிவாஸ் உட்பட 20 க்கும் மேற்பட்ட ‘கன்னா பின்னா’ படக்குழுவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Patrikai.com official YouTube Channel