துரை

ற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என கனிமொழி கூறியுள்ளார்.

 

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது கனிமொழி,

”மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழகத்தை மதிப்பது கிடையாது. தமிழகம் மழை,வெள்ளத்தால் பாதித்தாலும் எந்த நிவாரணமும் வராது.  அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனா ஆக்கிரமித்துப் பெயர் மாற்றமே செய்து விட்டது. இதைப் பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது. 

இதை பற்றி நாம் பேசினால் ‘நக்சல்’ என்பார்கள், ரெய்டு நடத்துவார்கள். இந்த தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். 

மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் கேட்டால் தரமுடியாது என்கிறார்கள். ஆனால் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கிறார்கள். ரூ 65 ஆயிரம் கோடிக்கு மேல் கார்ப்ரேட் நிறுவன கடனை ரத்து செய்துள்ளார்கள். ஆனால் விவசாயிகள் கடனை ரத்து செய்யச்சொன்னால் கேட்க மாட்டார்கள். 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டால் பக்கோடா போடச்சொல்கிறார்கள். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும். தன்னை கர்நாடகா காரன் எனக்கூறிய அண்ணாமலை தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்கிறார்.” 

என்று உரையாற்றி உள்ளார்.