கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 40
பா. தேவிமயில் குமார்

இதுதான் வேண்டும் இப்போது
*ஞாபக முடிச்சுகளின் தொடரில் நிறைய மனிதர்கள் நினைவில் வேண்டும்…..
*அறைக்குள்ளி ருந்து
உலகை காணும் அவலம் மாற வேண்டும் .
*தேற்றிடும் சில உறவுகள்
வேண்டும், கடை கோடி மனிதருக்கும்
*ஆரோக்கிய உரையாடல் அனுதினமும் வேண்டும் அனைவருக்கும்.
*ஒவ்வொரு அனுபவத்தையும் அணிகலனாக எண்ணிட வேண்டும்
*மனிதர்களைப் படித்திடும் புது மொழியை கண்டுபிடிக்க வேண்டும்
*மூளைக்குள் பொருத்தும் எலானின் சிப்பை அன்பிற்குள் பொருத்திட வேண்டும்.
*பிணையம் இல்லாத அழகான பந்தம் அனைவருக்கும் அமைய வேண்டும்.
*மேல்தட்டு கீழ்தட்டு
மனித பேதங்கள் மாற வேண்டும்.
*பிடித்த வேலையை மட்டுமே ,
பிடித்து செய்ய வேண்டும்.
*அனைவருக்கும் வரம் தரும்
இறைவன் வேண்டும்!
*மாற்றி யோசிக்கும்
மனிதர்களை மதிக்க வேண்டும்!
*போன்சாய் மனிதர்கள்
போயபப் வேர்களாக
மாற வேண்டும்…..
*நிரஞ்சனா நதியோரம்
இப்போது நான் எழுதியதெல்லா வற்றையும்…
பெற வேண்டும்!!!