சென்னை:  தூத்துக்குடி தொகுதியில், திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி யான அதிமுக  7  தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 49  தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது. இதற்கிடையில் திராவிட கட்சிகள் இன்றி போட்டியிட்ட தமிழக பாஜக தோல்வி அடைந்தாலும், மாநிலத்தில்  குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.

18வது மக்களவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான இண்டி கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, நடப்பு தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை விட 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்றுள்ளார். கனிமொழி கருணாநிதி எம்பியை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தமாக வேட்பாளர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இதன்மூலம், நடப்பு தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த வேட்பாளர் என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிகாரப்பூர்வ முடிவுகள்

கனிமொழி (திமுக) – 5,40,729, சிவசாமி வேலுமணி (அதிமுக) – 1,47,991, விஜயசீலன் (தமாகா) – 1,22,380, ரொவீனா ரூத் ஜோன் (நாதக) – 1,20,300

ஏற்கனவே கடந்த  2019-ல் நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி , அதிமுக-பாஜக கூட்டணியில் அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இதன் மூலம் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றது. முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்த கனிமொழி 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது முறை போட்டியிட்டு மீண்டும் சாதனை படைத்துள்ளார்.

அதிமுக :

2024 லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. தொடர்ந்து 10வது முறையாக அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.  32 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 7 தொகுதிகளில்  டெபாசிட் இழந்துள்ளது.  தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் மற்றும் தேனி ஆகிய ஏழு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. மேலும், 9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும், 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.

நாம் தமிழர் :

40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி சிவகங்கையில் அதிகபட்சமாக 1.63 லட்சம் வாக்குகள் பெற்றது நாதக கன்னியாகுமரியில் அதிமுகவிவை பின்னுக்குத் தள்ளி 3வது இடம் 6 தொகுதிகளில் 3வது இடம் பிடித்தது நாம் தமிழர் கட்சி.

இதற்கிடையில்  இரு பெரும் திராவிட கட்சிகளை தவிர்த்து தனித்து போட்டியிட்ட பாஜ அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும், வாக்கு சதவிகிம் அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது. அதுபோல, சில தொகுதிகளில், அதிமுகவை முந்தி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இதனால், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பிறகு,. பாஜக தமிழ்நாட்டில்,  குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

பாஜக:

இந்த தேர்தலில், மலைபோன்ற பலமுடைய திராவிட கட்சிகளை எதிர்த்து களமிறங்கிய பாஜக மலராவிட்டாலும்,  வாங்கி வங்கி அதிகரித்துள்ளதை அனைத்து அரசியல் நோக்கர்களும்  கூர்ந்து நோக்கி வருகின்றனர்.  குறிப்பாக திமுகவின் கோட்டையாக திகழும், சென்னையை எடுத்துக் கொண்டால், மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 2 தொகுதிகளிமே பாஜக 2வது இடத்தை பிடித்து, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி நாங்கள்தான் என்பதை மீண்டும் நெஞ்சுயர்த்தி காண்பித்துள்ளது.

கடந்த 2019 தேர்தலில், அதிமுக 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 30.27 சதவீத ஓட்டுகளை பெற்றது… திமுக 23 இடங்களில் போட்டியிட்டு 32.76 சதவீத ஓட்டுகளை பெற்றது… பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டு, 3.66 சதவீதம் பெற்றிருந்தது. ஆனால், இந்த லோக்சபா  தேர்தலில், அதிமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது.. திமுக 22 இடங்களில் போட்டியிட்டு, 26.93 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. ஆனால், பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 11.24 சதவீத ஓட்டுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இது அதிமுகவை விட அதிகம். இதனால்,   தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் பாஜக உருவெடுத்திருப்பதை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

இதுவரை பாஜக, காங்கிரஸ் போன்ற  தேசிய கட்சிகள்  மாநில திராவிட கட்சிகளின் தோள் மீது ஏறி கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்து வந்த நிலையில், இந்த முறை பாஜக, திராவிட கட்சிகிளின் கூட்டணியின்றி போட்டியிட்டு வாக்கு வங்கியை உயர்த்தி உள்ளது. இது மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் சாதனையாக கருதப்படுகிறது.  பாஜக தலைவர்கள், திராவிட கட்சிகளுடன் கூட்டணிக்கு சிபாரிசு செய்த நிலையில், தனித்தே போட்டியிட்டு பாஜகவின் வாங்கு வங்கியை பார்ப்போம் என்று கூறி களத்தில் இறங்கிய அண்ணாமலையின் உழைப்புக்கு இந்த தேர்தல் பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது.  அதாவது, 1உ 2 இடங்களில் பாஜக கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இது பாஜக மாநில அண்ணாமலையின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.