சென்னை: கம்யூனிஸ்டு கட்சிக்கு கண்ணையாகுமார் உண்மையாக இருக்கவில்லை, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லாதவர் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான கண்ணையாகுமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவராக இருந்து , நாட்டுக்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தியதால் பிரபலமானவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முறைப்படி சேர்ந்த கண்ணையா குமார், பீகாரில் தனது சொந்த தொகுதியான பெகுசாராயில், பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
இவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின்படி, நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது, ‘மிகப் பழமையான கட்சி பலப்படுத்தப்பட வேண்டும் என்று இணைந்தாகவும், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடப்போவதாகவும் கூறியுள்ளார்.
இநத் நிலையில், கண்ணையாகுமார் கட்சி தாவியது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா விமர்சித்துள்ளார். கண்ணையா குமார் கட்சியிலிருந்து தன்னை தானே விலக்கிக்கொண்டதாகவும், அவர் கம்யூனிச கொள்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்தவர், அவர் கட்சிக்கு உண்மையாக செயல்படவில்லை. கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லாதவர் என்று குற்றம் சாட்டினார்.
கட்சி மாறுவதும், காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் அவரின் தனிப்பட்ட முடிவு என்றாலும், சுரண்டல் இல்லாத புதிய சமுதாயத்தை படைக்க போராடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை பிடித்திருந்தால் அவர் கட்சியிலிருந்து நிச்சயம் வெளியேறியிருக்க இருக்க மாட்டார், அண்மையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் கூட கட்சியின் கொள்கையை வளர்க்க வேண்டும் என பேசியிருந்தார். ஆனால், அவர் திடீரென கட்சியை விட்டு வெளியேறியது ஏன் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
சிபிஐ-யின் கண்ணா குமார் காங்கிரஸ் கட்சியில் இணைவதில் பின்னணியாக செயல்பட்டவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்று கூறப்படுகிறது. அ
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், 2014 ஆம் ஆண்டில் ஒரு தொழில்முறை தேர்தல் ஆலோசகராக பாஜகவின் தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பேற்றவர். பின்னர் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி, பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ளார். 2014 பாராளுமன்ற தேர்தலை பாஜகவை தோற்கடிக்க காய்நகர்த்தி வரும் பிரசாந் கிஷோர் தற்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்ததன் மூலம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறார்.