நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிரா ஆளும் சிவசேனாவை எதிர்த்து பேசி னார். ’மும்பை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது’ என்றார். இது ஆளும் கட்சியினரையும் அதிகாரத்தில் உள்ளவர்களையும் கோபத்தில் ஆழ்த் தியது. அவரை எதிர்த்து கட்சி மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித் தனர்.
கங்கனா, பாஜவுக்காக ஆதரவாக பேசி வருகிறார். மனாலியில் தங்கி இருக்கும் கங்கனா அங்கேயே இருப்பது நல்லது. அவர் மும்பை வந்தால் மும்பை மக்கள் அவரை நிற்க வைத்து கேள்வி கேட்பார் கள் என எச்சரித்தனர். இதற்கிடையில் மத்திய பா ஜ அரசிடம் தனக்கு பாது காப்பு வேண்டும் என்று கேட்டார் கங்கனா. அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு அளித்தது, கமாண்டோ பாதுகாப்புடன் அவர் மும்பை வந்தார். அவருக்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் அவரது வீட்டில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப் பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் விட்டு அதை இடித்தனர். அதற்கு கங்கனா தரப்பில் கோர்ட்டில் தடை பெறப்பட்டது.
மும்பை வந்த கங்கனா தனது வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்து சிவசேனாவை தாக்கி பேசி வந்தார். இந்நிலையில் கங்கனா போதை மருந்து பயன்படுத்திய தாக அவர் பேசிய வீடியோ ஒன்று வைர லானது. இதையடுத்து அவரிடம் போதை தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் கங்கனா இன்று மும்பையிலிருந்து மனாலிக்கு அதே கமாண்டோ படை பாதுகாப்புடன் புறப் பட்டு சென்றார். ’உடைந்த இதயத்துடன் மும்பையை விட்டு செல்கிறேன்’ கங்கனா தெரிவித்திருக் கிறார்.