மும்பை:
பிரபல இந்தி நடிகையாக சர்ச்சை புகழ் கங்கனா ராவத்தின் சகோதரி ரங்கோலி சான்டலின் டிவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டு உள்ளது. மொராதாபாத் கல்லெறி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதால், அவரது டிவிட்டர் சமூக வலைதளம் முடக்கப்பட்டு உள்ளது.
மொராதாபாத் என்னும் இடத்தில் கொரோனா பரிசோதனைக்குச் சென்ற சுகாதாரத்துறை பணியாள்ர்கள், காவலர்கள் மீது ஒரு கும்பல் கல்லெறி தாக்குதல் நடத்தியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரங்கோலி சான்டலின் கடுமையாக விமர்சித்து டிவிட் பதிவிட்டிருந்தார். இது ஏராளமானோரால் பகிரப்பட்டு, வைரலான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த டிவிட்டர் பக்கத்தை படத்தயாரிப்பாளர் ரீமா காக்தி மும்பை காவல்துறைக்கு டேக் செய்திருந்தார். மேலும் குப்ரா சேட் என்பவரும் ரங்கோலியின் டிவிட்டர் அக்கவுண்டை முடக்க வேண்டும் என்று டிவிட்டர் சமூக வலைதளத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஏராளமானோர் ரங்கோலியின் டிவிட்டர் குறித்து கடுமையாக விமர்சித்து மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, கங்கனா ராவத்தின் சகோதரி ரங்கோலி சான்டலின் டிவிட்டர் அக்கவுண்ட்டை டிவிட்டர் நிர்வாகம் முடக்கியது.
இதற்கு டிவிட்டர்வாசிகளிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சுசேன் கானின் சகோதரி ஃபரா கான் ரங்கோலியின் கணக்கு மற்றும் ட்விட்டருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இதுபோல பலர் டிவிட்டர் நிறுவனர் ஜாக்-குக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
இந்தி நடிகையான கங்கனா ராவத் தற்போது தனது சகோதரி ரங்கோலி மற்றும் குடும்பத்துடன் மணாலியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.