காஷ்மீர் தேசத்தை சுமார் 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த முதல் பெண் என்ற பெருமைக்குரிய திட்டா வின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்த படம் – ‘மனிகர்னிகா : தி குயின் ஆஃப் தி ஜான்சி’.
கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ராணியாக கங்கனா ரணாவத் நடித்திருந்தார். “காஷ்மீரின் கிளியோபாட்ரா” என்று வர்ணிக்கப்பட்டவர் – திட்டா.

மனிகர்னிகா படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்துக்கு “மனிகர்னிகா ரிட்டர்ன்ஸ் : தி லெஜண்ட் ஆஃப் திட்டா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காஷ்மீர் ராணியின் முதல் பாகம் படத்தை தயாரித்த கமல் ஜெயினுடன் இணைந்து இந்த இரண்டாம் பாக திரைப்படத்தை கங்கனா தயாரிக்கிறார்.
பெரும் பொருள் செலவில் தயாரிக்கப்படுவதால், இதன் ஷுட்டிங், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகிறது.
– பா. பாரதி
[youtube-feed feed=1]