குயின், மணிகர்ணிகா, பாங்கா உள்ளிட்ட படங்களுக்காக தேசிய விருதுகளை அள்ளி உள்ள இந்த பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை குயினாகவும் வலம் வருகிறார்.

பாலிவுட் பிரபலங்கள் உடன் மோதல், மும்பை மாநகராட்சி உடன் சண்டை என ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியவர் கங்கனா ரனாவத்.

ட்விட்டரில் தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு அதன் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் கங்கனா ரனாவத் எனக் கூறி கங்கனாவின் கணக்கை அதிரடியாக முடக்கியது ட்விட்டர் நிர்வாகம்.

ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது கருத்துக்களை அதிரடியாக முன் வைத்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தன்னால் சரியாக வருமான வரி கட்ட முடியவில்லை எனக் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. கடந்த ஓராண்டாக எந்தவொரு வேலையையும் தான் செய்யவில்லை என்றும், தனக்கு வருமானம் வராத காரணத்தினால் தான் தன்னால் வரியை முழுமையாக கட்ட முடியவில்லை எனக் கூறியுள்ளார்.