பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பாதுகாவலரான குமார் ஹெக்டே மீது 30 வயது பெண் மும்பை டி.என். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்ததாக குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமார் ஹெக்டே மீது 376, 377 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமார் ஹெக்டே பற்றி அந்த பெண் கூறியதாவது :
8 ஆண்டுகளுக்கு முன்பு நான் குமார் ஹெக்டேவை சந்தித்தேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். நானும் சரி என்று கூறினேன். அதன் பிறகு அவர் பலமுறை என்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி என் வீட்டில் இருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்றார்.