பொழுது விடிந்தால் யாரிடமாவது, ட்விட்டரில் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார், இந்தி நடிகை கங்கனா ரணாவத். இதனால் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் பல வழக்குகளை எதிர் கொண்டுள்ளார்.

தயாரிப்பாளர்களுக்கும் அவரால் பிரச்சினை, டெல்லியில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என இவர் சொல்லி வைக்க – மத்தியபிரதேசத்தில் கங்கனா படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம் நடக்கிறது.

போலீஸ் பாதுகாப்புடன் ஷுட்டிங் நடந்துள்ளது.

கங்கனா சின்ன வயதிலேயே ‘இப்படித்தான்’ என, தனது அடாவடித்தனத்தை, ட்விட்டர் பக்கத்தில் போட்டு உடைத்துள்ளார்.

“எனது தந்தை கல்லூரி நாட்களில் பெரிய ரவுடி. லைசென்சு பெற்று துப்பாக்கி வைத்திருந்தார். நான் உலகில் பெரிய டாக்டராக வரவேண்டும் என்பது அவரது ஆசை. நான் சின்ன வயதில் பள்ளிக்கு போகாமல் அடம் பிடிப்பேன்.

இதனால் ஒருநாள், என் கன்னத்தில் அடிக்க, என் அப்பா கை ஓங்கினார்… கையை பிடித்துக்கொண்டேன்.

‘என்னை அடித்தால் நான் திருப்பி உன்னை அடிப்பேன்’ என்றேன். சிலை போல் உறைந்து போனார் அப்பாவுக்கும் எனக்கும் அன்று முதல் உறவு ‘கட்'” என பெருமையாக பதிவிட்டுள்ளார், கங்கனா.

– பா. பாரதி