ந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் விழா. ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். கஷ்த சஷ்டி திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முதல் ஆறு நாளும், சஷ்டி விரதமிருந்தால் நான் நினைத்த காரியம் கைகூடும்.

இந்த சமயத்தல் அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி, பகற்பொழுதில் உணவருந்தா மல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி வழிபாடு செய்வர். ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றில் எண்ணிய காரியம் ஈடேறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அறுபடை விடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூரில் கஷ்தசஷ்டி விழா உலகப்புகழ் பெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள்  திருச்செந்தூரில் குவிவார்கள். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 28ந்தேதி தொடங்கி நவம்பர் 8ந்தேதியுடன் முடிவடைகிறது.

இடையில், நவம்பர் 2ந்தேதி  சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பொதுவாக பக்தர்கள் சூரசம்ஹாரத்துடன் தங்களது 6 நாட்கள்  சஷ்டி விரதத்தை முடித்துகொள்வது வழக்கம். அதைத்தொடர்ந்து மற்ற 4 நாட்களும் முருகனுக்கு உகந்த பூஜை புனஸ்காரகங்ள், தேரோட்டம் நடைபெறும்.

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், அதுபோல முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது ஐதிகம்.  எனவேதான் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு கந்த சஷ்டி விரதமர்  மிகவும் சிறந்த விரதமாகும்.  குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 28ஆம் தேதி துவங்குகிறது. திருச்செந்தூரில் அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்டபூஜையும் நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார்.

காலை 7 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனையை தொடர்ந்து வேள்விசாலையிலிருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியம் முழுங்க சண்முகவிலாசம் சேர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது.

கந்த சஷ்டியின் 2வது நாள் முதல் 5வது நாள் வரை  அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 2ந்தேதி தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1.00 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு மேல்  சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

7வது நாளன்று திருக்கல்யாணமும், 8வது நாளன்று இரவு குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள்  பூம்பல்லக்கிலும் பட்டினப்பிரவேசம், திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

9வது நாள் முதல் 11ம் நாள் வரை, மாலை 6 மணி அளவில் குமரவிடங்க பெருமான் தெய்வானையுடன் ஊஞ்சல் காட்சி திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.

12வது நாளான இறுதி நாளன்று மாலை 4.30 மணிக்கு குமரவிடங்க பெருமானுக்கு மஞ்சள் நீராட்டும்,  அதைத் தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு இரவில் கோவில் திரும்புவர்.

இத்துடன் 12 நாட்கள் விழா இனிதே நிறைவு பெறுகிறது.

கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பாக நடைபெறும்.  திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.