
காஞ்சிபுரம் வேட்பாளரை மாற்றி விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு சி.ஏகாம்பரம் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்கள் நலக்கூட்டணி, தமாகா ஆகிய கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவை திரட்டி கழக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel