காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சில தொண்டர்களைக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும்,  அதிமுக, பாஜக ஆதரவுடன் ஜிகே வாசன் எம்.பி.யாகி வருகிறார். ஆனால், அவரது கட்சியினர் எந்தவொரு பதவிகளையும் பெற முடியாத நிலையே  தொடர்கிறது.

இந்த நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில்,  அ​தி​முக கூட்​ட​ணி​யில் தமிழ் மாநில​ காங்​கிரஸ் கட்​சி இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் தமாக வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில்,. தமாகாவில் இருந்து விலகுவதாக காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர்  அறிவித்து தனது பதவியை விட்ட விலகி உள்ளார். வெற்​றி​பெற வாய்ப்​பில்​லாத தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​ட​தாக எழுந்த புகார்​களைத் தொடர்ந்து இந்த முடிவை  எடுத்​துள்​ள​தாக  புருஷோத்தமன் கூறி உள்ளார்.

பின்னர் செய்​தி​யாளர்​களை சந்தித்தபோது,  ‘‘கட்​சித்​தலைமை, தமாகா கட்​சி​யின் வளர்ச்​சிக்​கான எவ்​வித ஆக்​கபூர்​வ​மான நடவடிக்​கைகளை​யும் எடுக்​க​வில்லை என்று குற்றம் சாட்டியவர்,   நடை​பெறவுள்ள தேர்​தலில் கட்​சி​யின் தனித்​து​வத்​தைப் பேணா​மல், பாஜக​வின் ‘தாமரை’ சின்​னத்​தில் போட்​டி​யிட ஜி.கே.​வாசன் எடுத்​துள்ள முடிவு தொண்​டர்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதனால் கட்​சி​யில் இருந்து விலக முடிவு செய்​துள்​ளேன்​’’ என்​றார்​.

[youtube-feed feed=1]