காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு அத்திரவரதர் வைபவம் நடைபெற்றபோது தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் குளத்திற்குள் சயனிக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. இந்த விழா நடைபெற்ற 48 நாட்களில் 10 கோடியே 7 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதர் தரிசனத்தின்போது நடைபெற்ற வரவுசெலவு கணக்குகளில் பெரும் குளறுபடி நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த விழாவின்போது 50 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் தொடங்கி ஆட்களுக்கு தகுந்தவாறு விதவிதமான பாஸ்கள் விற்பனை செய்யப்பட்டன. பச்சை நிற பாஸ் வி.வி.ஐ.பிக்களுக்கும், சந்தன நிற பாஸ் வி.ஐ.பிக்களுக்கும் வழங்கப்பட்டன.