காஞ்சிபுரம்:
உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை ஜெயேந்திரர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவரகள், ஆன்மிக மடாதிபதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மறைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். ஆன்மீக பணிகளோடு சமூக முன்னேற்றத்திலும் அக்கறை காட்டியவர் ஜெயேந்திரர் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
துணைமுதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, காஞ்சி மடத்தின் பீடாதிபதி திரு.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காஞ்சி சங்கராச்சாரியார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் சுஷ்மா பிரபு, அருண் ஜெட்லி, பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் மதுரை ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் போன்ற மடாபதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாமக தலைவர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அதிமுகவை சேர்ந்த வைகை செல்வன் உள்ளிட்டோர் ஜெயந்திரர் மறைவு இரங்கல் தெரிவித்துள்ளனர்.