காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமம்  ஆகும். இஹ்கு 1935ம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ ஐயர் என்பதாகும்.

1954ம் வருடம் தனது 19ம் வயதில் காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதியாக அவர் சேர்ந்தார்.  பிறகு 1994ம் வருடம் தனது 69ம் வருடம் மடாதிபதியாக பொறுப்பேற்றார்.

இவரைப்பற்றி பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. காஞ்சி வரதராஜ கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். 2004ம் வருடம்  நவம்பர் 11ம் தேதி இந்த கைது நடந்தது.

 

2013ல் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே திடீரென மடத்தைவிட்டு எங்கோ சென்றதும், அப்போது தண்டத்தை வைத்துவிட்டு சென்றதும் சர்ச்சையானது.

இவர் ஒரு அரசியல் கட்சியையும் துவக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது 83ம் வயதில் உடல் நலக்குறைவால் ஜெயந்திரர் மரணமடைந்துள்ளார்.