காவிரி பிரச்சினையால் கர்நாடகத்தில் கலவரம் மூண்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. தமிழக பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
இந்த கலவரம் பெருக, ஊடகங்களே காரணம் என்று பல தரப்பினர் தற்போது குற்றம்சாட்டி வருகிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் நடந்த வன்முறையை நாள் முழுக்க ஒளிபரப்பி, பெரும் பதட்டமான சூழ்நிலையை தொலைக்காட்சிகள் ஏற்படுத்திவிட்டன் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக கர்நாடக ஊடகங்களுக்கு மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.
பதட்டத்தை ஏற்படுத்தும்படியாக செய்திகளை ஒளிபரப்பினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, “ஊடகங்களால்தான் கலவரம் வெடித்தது” என்று கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.