
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. கரகாட்டக்காரன் படத்தின் மூலமாக நடிகை ஆனார். முதல் படமே வெள்ளி விழா படமானதால் கனகாவுக்கு வாய்ப்புகள் வரிசை கட்டியது.
2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை.
40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கனகா தற்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
இதுகுறித்து கனகா வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் நடிக்க வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. சில காரணங்களால் இடையில் நடிக்கவில்லை. இப்போது எனக்கு 50 வயது ஆகிறது. தற்போதைய சினிமாவின் போக்கு மாறி இருக்கிறது. ஒப்பனை, சிகை அலங்காரம், துணி மணிகள், செருப்பு, நகை, பேசுவது, சிரிப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
நான் ஏற்கனவே நடித்த மாதிரி நடித்தால் பழைய மாதிரி இருக்கிறது என்பார்கள். மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் சினிமாவின் புதிய நுட்பங்களை கற்று வருகிறேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் கற்றுக்கொள்வேன்’’ என்று பேசி உள்ளார்.
[youtube-feed feed=1]