கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து “காலம் சொல்லும்” என்று ரஜினி பதில் அளித்த நிலையில் அதை வழிமொழிவதாக கமல் அறிவித்துள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த கமல் தெரிவித்ததாவது: “மக்களையே மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். அவர்களின் பலத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
அவர்களுக்கு, தங்களது பலம் தெரியும்தான். அதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இணைந்து செயல்படுவது குறித்து காலம் பதில் சொல்லும் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். காலம்தான். காலம் ஒரு மருந்து. அதுவே எனது பதிலாக இருக்கட்டும். ரஜினி கூறியதை வழிமொழிகிறேன்.
நான் பகுத்தறிவுவாதி. உங்கள் கடவுளை அறிவதும் என் விருப்பம்” என்று கமல் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel