
நேற்று முன்தினம், “பிக்பாஸ்” நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகள் குறித்து அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது, காயத்ரி ரகுராம், “சேரி பிஹேவியர்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டணம் தெரிவிக்கப்படுவது குறஇத்து கேட்கப்பட்டது.

அதற்கு கமல்ஹாசன், “நாம் வாழும் சொசைட்டியில இதைவிட மோசமான வார்த்தைகளை பயன்படுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க” என்ற கமல், “இதே நிகழ்ச்சி வேறு பல மொழிகளிலும் நடந்திருக்கிறது. இந்தியிலும் ஒளிபரப்பானது. இந்தி தெரியாததால் நம்மவர்களுக்கு அது தெரியவில்லை. மற்ற மொழிகளில் ஒளிபரப்பானபோது அங்கு எதிர்ப்பு கிளம்பவில்லையே” என்றார்.
ஆனால் ஏற்கெனவே சேனல் 4 என்ற தொலைக்காட்சியில் இதே நிகழ்ச்சி ஆங்கிலத்தில் ஒளிபரப்பானபோது கடும் கண்டனம் எழுப்பப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் ஜோடி கூட் எனும் மாடல், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியை, “பாக்கி, இந்தியன், கன்ட், சேரிவாசி நாற்றம் பிடித்தவள்’ என்று கடுமையாக பேசினார். இவருடன் சேர்ந்து மேலும் நால்வர் ஷில்பாபை இழிவாக பேசினனர்.
இதற்கு உலக அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனல் 4 தொலைக்காட்சியை, பிரிட்டனின் ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ‘ஆப்ஸ்பாம்’ கண்டித்தது. பிரிட்டன் அரசும் கண்டித்தது. அவ்வளவு ஏன், இந்திய அரசும் அதிகாரபூர்வமாக கண்டனம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தால் அந் நிகழ்ச்சியின் விளம்பரதாரர்கள் விலகிக் கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியே நின்றுபோனது.
ஆனால் இந்த சம்பவத்தையே அறியாதவராக இருக்கிறார், எல்லாம் தெரிந்த கமல் என்பதுதான் ஆச்சரியம்.
[youtube-feed feed=1]