ன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல் குறித்த, “பூ, விதை” விமர்சனம் குறித்து பேசினார்.

அப்போது அவர், “தமிழக அமைச்சர் ஜெயக்குமார், கமலை காகிதப்பூ என்றார்.. இவர் விதை என்கிறார்” என்று கூறினார்.

ஆனால், கமலை மறைமுகமாக காகிதப்பூ என்றவர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். இதற்கு கமல், “ நான் பூ அல்ல.. விதை” என்றார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், “கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை” என்றார். இதைத்தான் தவறாக புரிந்துகொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

“திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறிய காகிதப்பூ விமர்சனசனத்தை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக கூறுகிறாரே பொன்.ரா” என்று செய்தியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.