‘பாஜக மந்திரி சபை மகா, மெகா தமாசு..’’
மத்தியப்பிரதேச மாநில முதல்-அமைச்சராக பா.ஜ.க.வின் சிவராஜ்சிங் சவுகான். சரியாக 30 நாட்களுக்கு முன் பதவி ஏற்றார்.
கொரோனாவுக்கு அந்த மாநிலத்தில் 80 பேர் உயிர் இழந்துள்ள நிலையில், இதுவரை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.
‘’நானே ராஜா..நானே மந்திரி’’ என்பது போல் ஒற்றை ஆளாக மாநிலத்தைப் பரிபாலனம் செய்து வந்தார்.
முதன் முறையாக நேற்று அமைச்சரவையில் 5 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர், அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி, கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழக் காரணமாக இருந்தோர்.
அதாவது, மாதவராவ சிந்தியா ஆதரவாளர்கள்.
அமைச்சர்களுக்கு இலாகாக்கள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
ம.பி.யை 5 ஆகப் பிரிந்து ஆளுக்கு ஒரு மண்டலத்தில் கொரோனாவை சமாளிக்கும் பொறுப்பை 5 அமைச்சர்களுக்கும் ஒப்படைத்துள்ளார், சவுகான்.
அதாவது 5 பேரும் இலாகா இல்லாத மந்திரிகளாகச் செயல்படுவார்கள்.
இதனை மத்தியப்பிரதேச முன்னாள் முதல்- அமைச்சர் கமல்நாத் கிண்டல் செய்துள்ளார்.
‘’ அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்காதது ஒரு ’’ஜோக்.’’ 7.5 கோடி (மத்தியப்பிரதேச) மக்களைக் கிண்டல் செய்யும், ‘ஜோக்’’’ என்று தெரிவித்துள்ளார், கமல்நாத்.
– ஏழுமலை வெங்கடேசன்