பெங்களூரு:
கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெங்களூரு சென்றுள்ளார். இன்று பெங்களூரில் முகாமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்க இருக்கிறார். அப்போது காவிரி குறித்து அவரிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் கமலஹாசன் சென்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் பெங்களூரு பயணமாகி உள்ளார். அங்கு கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள காவிரி விவகாரம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன், ஏற்கனவே , காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆனால், காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி, , மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இதற்கான உறுப்பினர்களையும் தமிழக அரசும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு புறப்பட்டுச் சென்ற கமல், காலா சினிமா தொடர்பாக கர்நாடகா முதல்வரை சந்திக்க செல்லவில்லை. காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்காக செல்கிறேன் என்று கூறினார்.