சென்னை
ம நீ ம தலைவர் கமலஹாசன் தமிழகம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் முன் மாதிரியாக உள்ளதாக கூறி உள்ளார்.

நேற்று சென்னை கொளத்தூரில் நடந்த முதல்வர் முக் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்’
கமலஹாசன் தனது உரையில்,
தமிழகம் இன்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு முன் மாதிரியாக உள்ளது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் உள்ளிட்ட அத்தனை தரப்பட்டியலிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இது வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு கூட புரியும் உண்மை. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டு இளைஞர்கள் விளையாட்டுத் துறையிலும் பதக்கங்களை குவித்து கொண்டு இருக்கிறார்கள்.
மத்திய அரசு, மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயலும்போது, இந்துத்துவ கொள்கைளையும், இந்தியையும் தேசமெங்கும் திணிக்க முற்படும்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கும்போது, தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரல்களில் சிறப்பான குரலாக ஸ்டாலின் விளங்குகிறார்.
தமிழ் மொழியையும், பண்பாட்டையும் போற்றிப் பாதுகாக்கும் அரும்பணியில் தன்னை தளராது ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் நீடுழி வாழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன். கொளத்தூர் தொகுதி முதல்வரின் மனதுக்கு நெருக்கமான தொகுதி என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். அவர்தான் கொளத்தூரை தனி தாலுக்காவாக மாற்றினார். முதல்வர் படைப்பகம், பெரியார் மருத்துவமனை என்று அவர் கொளத்தூர் மக்களுக்கு செய்தவை ஏராளம்”
என்று கூறியுள்லார்.