சென்னை
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை பற்றி கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிந்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொலைக்கான காரணமும், கொலை செய்தவர்களைப் பற்றியும் இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் கவுரி தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் சொல்ல இயலாதவர்களால் தான் அவர் கொல்லப்பட்டிருப்பார் என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நடிகர் கமலஹாசன் கவுரியின் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியுட்டுள்ளர்.
அதில் அவர் கூறியுள்ளதாவது :
”Silencing a voice with a gun is the worst way to win a debate. Condolence to all those who are grieving Gauri Lankesh”s Demise.” என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் பொருள் “துப்பாக்கி மூலம் ஒருவரின் குரலை ஒடுக்குவது வாதத்தில் வெற்றி பெற்றதாகாது. கவுரி லங்கேஷின் மறைவினால் துக்கம் அடைந்துள்ளவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்பதாகும்.