ரவுண்ட்ஸ்பாய்:
விஞர் நா.முத்துக்குமார் மறைந்த செய்தியைக் கேட்டதிலிருந்தே மனசு சரியில்லை.  அழகழகான சினிமா பாட்டுங்க மட்டுமா… புத்தகமாவும் எவ்வளவு எழுதியிருக்காரு!
aaபட்டாம்பூச்சி விற்பவன், தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, ஆனா ஆவன்னா, என்னைச் சந்திக்க கனவில் வராதே, குழந்தைகள் நிறைந்த வீடு, சில்க் சிட்டி, வேடிக்கைப் பார்ப்பவன், பால காண்டம்… அவரோட எழுத்துக்கள் அத்தனையுமே முத்து தான்!
சொந்தத்துல ஒரு உசுரு போன மாதிரி, மனசு கிடந்து அடிச்சுக்குது.
இந்த நேரத்துல பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்னு சமூகவலைதளங்கல்ல “மது பழக்கம் அதிகமானதாலதான்  ஈரல் கெட்டுப்போயி, மரணம் வரை வந்துருச்சு. ஒரு நல்ல கவிஞருக்கு இப்படி ஒரு நிலைமையா”னு ஆளாளுக்கு வருத்தத்தோட எழுதிகிட்டிருக்கிறதை பார்த்தேன்.
என் நண்பன் ராசுவுக்கு போன்போட்டேன். “ரோசா நேசன்” அப்படிங்கிற பெயர்ல அப்பப்ப கவிதை மாதிரி ஏதாவது எழுதுவான்.
அவன்கிட்ட என் ஆதங்கத்தை கொட்டினேன்.
அதுக்கு அவன், “அடேய், ரவுண்ட்ஸ்பாய்! நமக்கே இவ்வளவு ஆதங்கமா இருக்கே. நா.முத்துக்குமாரோட “அறிவு” ஆசான் இருக்காரே… அவரு கொதிச்சே போயிட்டாராமா!”
“யாரைச் சொல்லுற..”
“அதாம்பா.. அறிவு”நிலா”!
“ஓ.. அவரா.. நல்ல மனுசன் ஆச்சே!  சினிமா பாடல்கள்ல ஆங்கிலம் கலக்க மாட்டேன், ஆபாசமா எழுத மாட்டேன்னு கொள்கை வச்சிருக்கிறவரு.  போட்டி, பொறாமை நிறைஞ்ச சினிமா உலகத்துல இவரு ரொம்ப வித்தியாசமான மனுசன்.  தன்னை நாடி வர்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுப்பாரு. தமிழ் ஆர்வம் அப்படிங்கிறதவிட, தீவிர தமிழ்ப்பற்றாளர்னு இவரை சொல்லலாம்.  இவரை எனக்கு ரொம்ப புடிக்கும்பா!”
“அவரை யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தை மனசுக்காரர்!”
“சரி.. அவரு ஏதோ கொதிச்சுப்போயிட்டாருன்னு சொன்னியே…!”
“சொல்றேன்!  சமீபத்துல மேற்கு மாவட்ட புத்தக கண்காட்சிக்கு போயிருக்காரு அறிவு”நிலா”. தன்னோட அறையில உக்கார்ந்து நண்பரோட பேசிக்கிட்டிருந்திருக்காரு. அப்போ   சென்னையிலேருந்து அவரை தொடர்பு கொண்ட பத்திரிகயாளரு   ஒருத்தரு, நா.முத்துக்குமார் – மது.. அப்படினு பேச ஆரம்பிக்க.. கொந்தளிச்சிட்டாரு அறிவு”நிலா”!”
“ஓ.. என்ன சொன்னாராம்..”
“முத்துக்குமாரை  இந்த (மது) பார்வையில பார்க்காதீங்க.   அவன் புகழ் பெற்ற பாடலாசிரியன். முதல்ல நா.முத்துக்குமார்  என்னென்ன எழுதியிருக்கிறான்னு படிங்க.  2500 பாடல்கள் எழுதியிருக்கான்.  அத்தனையும் தமிழுக்கு பரிசு. முதல்ல அவனை நிலை நிறுத்தணும்.. நா.முத்துக்குமார் மறைவு என்பது, தமிழ் அடையாளத்துல ஒருத்தனை இழந்ததாக அர்த்தம்.  அதுக்கப்புறம்  மத்த விசயத்தை எழுதணும்  ஒரு. கவிஞனை பலகீனப்படுத்தறது, ஒரு இனத்தை பலகீனப்படுத்தறதுக்கு சமம்”னு சொல்லியிருக்காரு!”
“சரியான கருத்துதான்..”
“அதுக்கப்புறம் அறிவு”நிலா” ஆவேசமாயிட்டாரு.  “சமீபத்தில மறைஞ்ச  கவிஞர் ஞானக்கூத்தன் குடிச்சாரா இல்லையான்னு உங்களுக்குத் தெரியுமா?  அவரைப்பத்தி இந்து நாளிதழ்ல இரண்டு பக்கம் எழுதியிருக்கான்.  அவரோட எழுத்தாளுமை பற்றித்தானே எழுதியிருக்கான்?!”னு ஆதங்கமா சொல்லியிருக்காரு!”
“ஓ…”
“இன்னும் கேளு… “இப்போ முத்துக்குமார் பத்தி அறிவுரை சொல்லற எல்லாருமே, குடிக்காமத்தான் இருக்காங்களா..? முத்துக்குமாரோட மரணம் கூட அழகுனு உள்ளர்த்தம் வச்சி அஞ்சலி அறிக்கை விட்டுருக்காரு பாடலாசிரியர் வைரமுத்து.  நா.முத்துக்குமாரை கொச்சைப்படுத்தி, தான்தான் பெரிய ஆளுன்னு காட்டிக்க ஒரு வாய்ப்பா அவரு பயன்படுத்திக்கிறாரு. இந்த வைரமுத்து குடிக்கமாட்டார்னு நிரூபிங்களேன் பார்ப்போம்..
தங்கர் பச்சான் கூட..ஏதேதோ பேசியிருக்கான். தங்கர் பத்தி எனக்கு சொல்ல ஆயிரம் இருக்கு… அதை நான் சொல்லலாமா?
நடிகர் கமல்கூட, ஏதோ தற்கொலை அது இதுன்னு அஞ்சலி அறிக்கை விட்டுருக்காரப. அவரு குடிக்கிறதில்லையா…?  அவரு கால் ஏன் உடைஞ்சதுன்னு போய் கேட்டுப்பாருங்க!
அவ்வளவு ஏன்…  நான் குடிப்பேனா இல்லையானு உங்களுக்குத் தெரியுமா?  அதனால குடியை வைச்சு ஒருத்தனை கொச்சைப்படுத்தாதீங்க”னு கொட்டித்தீர்த்துட்டாரு!”
“ஓ…”
“இன்னும் கேளு!  “முத்துக்குமார் இறந்து உடல் வீட்டில இருந்தப்போ, அத்தனை ஊடகங்கள் கேமராவை வச்சு நின்னுச்சே. பிணத்தை வச்சு வியாபாரம் செஞ்சுதே..! அதுவும் தப்புதானே!”னு கேட்டிருக்காரு!”
“சரியான கேள்விதான்!”
“அப்புறம்,  “நடிகர் விஜய் வரும்போது, சிலபேரு விசில் அடிக்கிறான். ஒரு கவிஞனை அவமானப்படுத்தற விசயம் இல்லையா இது? ஆனா, இதுல யாரை நாம கோபிக்க முடியும். தள்ளி விடுறதும் நம்ம பிள்ளைகள்தான்..! அவங்களை நாமதான் திருத்தணும். அரசியல் தெளிவி்ல்லாதவனுக்கு  அரசியல் தெளிவு ஏற்படுத்தஊபம். வாழ்க்கை தெளிவில்லாதவனுக்கு வாழ்க்கை தெளிவு ஏற்படுத்தணும்!
அதைவிட்டுட்டு,  குடி மாதிரி  சின்ன சின்ன பிரச்சினைகளை ஏன் கிளப்பணும்?  என் அப்பன் குடிக்கிறான்…  என் ஆத்தா குடிக்கிறா… தாத்தா குடிக்கிறான்!  இது ஒரு பெரிய விசயமா?
வைரமுத்துவும் இன்னும் சிலபேரும் கொடுத்த அஞ்சலி அறிக்கைகளை முத்துக்குமாரோட பிள்ளைகள் பின்நாட்கள்ல படிச்சா எவ்வளவு மனவேதனைப்படுவாங்க?  எங்க அப்பனை குடிகாரன்னு இவனுங்க சொல்லியிருக்கானுங்களேனு அந்த குழந்தைகள் நினைக்கமாட்டாங்களா”னு ஆவேச ஆட்டம் ஆடிட்டாரு அறிவு”நிலா”!”
“கேக்கவே சந்தோசமா இருக்கு. நம்ம மனுசுல இருந்ததை அப்படியே அறிவு”நிலா” அண்ணன் கொட்டிட்டாரு!”