சென்னை,

டிகர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் சிங்கப்பூரில் குறைந்த அளவு ஜிஎஸ்டி வசூலிப்பதாகவும், தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இசைக்கப்படும் தேசிய கீதம் குறித்து நடிகர் கமலஹாசன் டுவிட் செய்துள்ளார்.

மெர்சனல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜிஎஸ்டி குறித்த வசனங்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என  தமிழக பாரதிய கட்சியினர் கடுமையாக எச்சரித்தனர். இதன் காரணமாக  தமிழகத்தில் மெர்சல் குறித்த சர்ச்சை விவாதமாக மாறியது.

விஜய்க்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்தனர். அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூட மெர்சல் குறித்து  பாரதியஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் கமலஹாசனும , சிங்கப்பூரை குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.

அதில், சிங்கப்பூரில் தேசிய கீதம் நள்ளிரவில் இசைக்கப்படும். அதேபோல் இங்கும் பின்பற்றலாம். ஆனால், தேவையற்ற இடங்களில் எனது தேசப்பற்றை கட்டாயப்படுத்தவோ அல்லது சோதிக்கவோ வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.