இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் திரையுலகப் பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
சிங்கப்பூர் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ரஜினி தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். தற்போது கமலும் சிங்கப்பூரில் வாழும் மக்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ளார்.
Courtesy : Govsingapore
அதில் கோவிட்-19 தொற்று உலகம் எங்கிலும் பரவியுள்ளது. இந்தத் தொற்று மரணத்தை விளைவிக்கக் கூடியது. இதில் அரசாங்கத்துக்கு நிகராக நம்முடைய பாதுகாப்புக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார் .
மேலும் சிங்கப்பூர் அரசாங்கம் உங்களுக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பாராட்டி, அதற்கேற்ப போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை நீங்கள் கடைப்பிடித்தால் அரசாங்கத்தின் பணி ஏதுவாக இருக்கும்.
நாளை நாம் இந்த கோவிட்-19 பரவலைத் தடுத்து வென்றபின் உலகம் பெருமை கொள்ளும்போது, அதில் ஒரு உன்னத இடம் சிங்கப்பூருக்கும் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆர்வத்துடன் சிங்கப்பூர் அரசு செய்யும் என நான் நம்புகிறேன்என தெரிவித்துள்ளார் .