கமல் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் நேற்று அவர் முதலாவதாக அர்ச்சனா மற்றும் நிஷா இடையே எழுந்த சண்டையைப் பற்றி பேசினார். மேலும் நிஷாவை ஜெயிலுக்கு போக சொல்கிறார் கமல்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கமல் சொன்னதில் இருந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பதற்றத்தில் தான் இருக்கின்றனர்.
நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். அதை கமல் அறிவிக்கும் முன் போட்டியாளர்களிடம் பேசி இருப்பது தற்போது வெளிவந்திருக்கும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், மைக் சரியாக போட்டுள்ளீர்களா என்று கமல் கேட்கிறார். அதற்கு ரியோ மற்றும் அர்ச்சனா…ஓ சரியா போட்டுள்ளோம் என்று கூற, நடந்த உண்மையை போட்டுடைக்கிறார் கமல். அர்ச்சனா மைக்கை சரியாக மாட்டாமல் சில இடங்களில் ஏமாற்றும் விதத்தில் மைக்கை கீழே தள்ளி வைத்துவிட்டு பேசுவது, கழற்றி வைத்துவிட்டு பேசுவது உள்ளிட்ட தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்ட அர்ச்சனா கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
#BiggBossTamil இல் இன்று.. #Day70 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/3CI3fYBQ2g
— Vijay Television (@vijaytelevision) December 13, 2020
சோம சேகரிடம், நிஷாவிடம், ஷிவானியிடம் ஒரு விஷயம் கூறும் போது அதை கழட்டி வெச்சிட்டு பேசுரீங்க. மைக்கை கழட்டி வைப்பது ஒரு விதிமுறை மீறல். இதற்கு முன் அப்படி செய்தவர்களை வெளியில் கூட அனுப்பி இருக்கோம் என கூறி எச்சரித்து இருக்கிறார்.
#BiggBossTamil இல் இன்று.. #Day70 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/JKR7SYLTHc
— Vijay Television (@vijaytelevision) December 13, 2020