பால்கி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த அக்ஷரா தற்போது Trend Loud நிறுவனம் தயாரிக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்து வருகிறார். அக்ஷரா கைவசம் அக்னிச் சிறகுகள் படம் உள்ளது.
இந்நிலையில் அக்ஷரா ஹாசன் குழந்தையாக இருக்கும் போது பாடிய பாடல் வீடியோவை அவரது தந்தையும், திரையுலகின் உலகநாயகனுமான நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.
https://twitter.com/Iaksharahaasan/status/1311928527848005632
இதற்கு நன்றி தெரிவித்து அக்ஷரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாய்ப்பை தந்த பாப்புஜி அவர்களுக்கு நன்றி என்று கமல் ஹாசனை டேக் செய்துள்ளார்.