கோவை:

மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.


கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சியான இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால், விசாரித்து உண்மை என்றால் உடனடியாக ராஜினாமா செய்வார்கள் என்றார்.

பல்வேறு உறுதி மொழிகளை அவர் வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், பல்லக்கில் ஏறுவதை விட பல்லக்கு சுமப்பவனாக இருப்பதையே விரும்புவதாகக் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 

சிவகங்கை- சினேகன்

கோவை- மகேந்திரன்

காஞ்சிபுரம் – எம்.தங்கராஜ்

திருவண்ணாமலை – அருள்

ஆரணி – வி.ஷாஜி

கள்ளக்குறிச்சி – கணேஷ்

தென்சென்னை – ரங்கராஜன்

மதுரை – அழகர்

தஞ்சை – ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ்

கடலூர் – அண்ணாமலை

தென்காசி – முனீஸ்வரன்

திருப்பூர் – சந்திரகுமார்

பெரம்பலூர் – அருள்பிரகாசம்

நாமக்கல் – ஆர்.தங்கவேலு

ஈரோடு – சரவணக்குமார்

ராமநாதபுரம் – விஜயபாஸ்கர்

கரூர் – ஹரிஹரன்

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

பெரம்பூர் – வி.பிரியதர்ஷினி

திருப்போரூர் – கே.யு.கருணாகரன்

சோளிங்கர் – கே.எஸ். மலைராஜன்

குடியாத்தம் – டி.வெங்கடேசன்

ஆம்பூர் – நந்தகோபால்

ஓசூர் – ஜெயபால்

நிலக்கோட்டை – ஆர்.சின்னதுரை

திருவாரூர் – கே. அருண் சிதம்பரம்

தஞ்சாவூர் – துரையரசன்

ஆண்டிப்பட்டி – தங்கவேல்

பெரியகுளம் – கே.பிரபு

சாத்தூர் – என். சுந்தர்ராஜ்

பரமக்குடி – உக்கிரபாண்டியன்

விளாத்திகுளம் – டி.நடராஜன்

திருபெரும்புதூர் – ஸ்ரீதர்