சென்னை

க்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வரும் 25ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறுகிறது.

நடிகர் கமலஹாசன் தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியது தெரிந்ததே.   இந்தக் கட்சிக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது குறித்து கமலஹாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுபதற்கான நேர்காணல் நடைபெற உள்ளது.   இதற்காக முக்கிய பிரமுகர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வரும் 20 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.   நேர்காணல் வரும் 25ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

25ஆம் தேதி : சென்னை (வடக்கு, தெற்கு, மத்திய),  காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்

26 ஆம் தேதி : திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நீலகிரி,கோவை, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்கள்

27 ஆம் தேதி : நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள்

28ஆம் தேதி ; புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள்

29 ஆம் தேதி : நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி

30, 31 மற்றும் ஜுன் 1 : ஒருங்கிணைத்தல், சமர்ப்பித்தல்  போன்ற பணிகள்

இந்த நேர்கணலை ஒட்டி அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் வரும் 25ஆம் தேதி முதல் ஜுன் 1 வரை தலைமை அலுவலகம் வர வேண்டும்” என கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.