
மக்கள் நீதி மைய்ய தலைவர் கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசனின் 90வது பிறந்த தின விழா மிகச்சிறப்பான முறையில் நேற்று ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் குடும்பத்தாரும், உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த பிறந்த நாள் விழாவில் இளையராஜா, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், நடிகை சுகாசினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் போது நடிகர் கமல்ஹாசன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காணப்பட்டிருக்கிறார். இந்தியன் 2 படத்திற்காக இந்த லுக்கில் கமல் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகர் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் படங்களில் நடித்தது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Patrikai.com official YouTube Channel