ஹபீஸ் கான் என்பவர் வெடித்த பட்டாசு குழல்களை கொண்டு சிறிய செடி தொட்டிகளை உருவாக்கியுள்ளார்.
இதை பாராட்டி பதிவிட்ட கமல், ”வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின் சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம்” என பாராட்டியுள்ளார்.
இதையடுத்து ஹபீஸ் கானின் செயலுக்கு இணையத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின் சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம். pic.twitter.com/8vYQzSwkgI
— Kamal Haasan (@ikamalhaasan) November 18, 2020