
சென்னை: முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன்.
தேர்தலில், திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தவுடன், டிவிட்டரில் வாழ்த்துக்களைப் பரிமாறியிருந்தார் கமல். திமுக தலைவரும் அதற்கு சிறப்பான முறையில் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று, சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாகவே சென்று, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் கமலஹாசன். அப்போது, உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
இந்த சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலஹாசன், பாஜகவின் வானதியிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel