ஜெய் பீம் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில், படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இருளர் பழங்குடியினருக்கு நேர்ந்த போலீஸ் கொட்டடி கொடுமைகளை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜெய் பீம்.
படத்தை நேற்றுப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் படத்தையும், படக்குழுவினரையும், முக்கியமாக சூர்யாவையும் பாராட்டி நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஜெய் பீம் படத்தைப் பார்த்த நடிகர் கமல் ஹாசன், சூர்யாவையும், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்த ட்வீட்டில், “#JaiBhim பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். pic.twitter.com/YjSkfaeeiO
— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2021