சென்னை: 
ஜினிகாந்த் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினியின் இளைய மகள் உடன் இருந்து அவரை பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் நேற்று மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார் என்றும், அவரைப் பார்க்க யாரும் மருத்துவமனைக்கு வரத்தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ரஜினியின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கச் சிகிச்ச அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
இந்நிலையில் ரஜினி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என அவரது நண்பரும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.