சென்னை: திமுகவுக்கு எதிராக கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், “ஒரு மாநிலங்களவை இடத்திற்காகத் தனது கட்சியை முடித்துவிட்டார்” நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர் என்று திமுகவை சாடிய கமல்ஹாசன் தேர்தலில் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் எந்தவொரு கட்சியுடனும் குதிரை பேரத்தில் ஈடுபடாது என்றும், கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று விமர்சித்த கமல்ஹாசன் இன்று அதே கட்சியின் காலடியில் விழுந்துள்ளது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தனக்குத்தான் எல்லாம் தெரியும் என அதிகார மமதையோடு செயல்படும் நடிகர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன். பல இடங்களில் அவர் பேசுவது என்ன என்பதே புரியாத வகையில், எதையாவது பேசி, மக்களை குழப்பி தன்னை முன்னிலைபடுத்திக்கொள்வதிலும் முதன்மையானவர். 2018ல் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் இதுவரை குறிப்பிட்ட எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமலும், கட்சியை நடத்த முடியாமலும் தள்ளாடி வருகிறார்.
அவர் கட்ச தொடங்கும்போது, தமிழக அரசியல் கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், , தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியை தொடங்கியதாக கூறினார். மேலும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களையும் கடுமையாக சாடியதுடன், திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச டிவியை தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டை வீசி உடைக்கும் வீடியோ வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அரசியல் வியாபாரமாகி விட்டது என்று விமர்சித்த கமல்ஹாசன், இன்று அந்த வியாபாரத்தில் விலை போய்விட்டார் என்பது வருத்தத்குறிய விஷயமே.
மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழ்நாட்டில் போனியாத நிலையில், எதை குடும்ப கட்சி என்று விமர்சித்தாரோ அதே திமுக கட்சியுடன் ஆதாயத்துக்காக கூட்டணி அமைத்து, மாநிலங்களை எம்.பி. பதவியை வாங்கியுள்ளார் கமல்ஹாசன். இது அவர்து அரசியல் நிலைப்பாட்டை கேலிக்குறியதாகக் உள்ளது. கமலில் இந்த செயல் அவர்மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கமல்ஹாசன் நடவடிக்கை குறித்து தவெக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து கூறிய த.வெ.க. துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கமல்ஹாசன் ஒரு மாநிலங்களவை இடத்திற்காக தனது கட்சியை முடித்துவிட்டார் எனக் கூறினார்.
செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல்குமார், “கல்வி விருது வழங்கும் விழா அரசியல் சார்ந்த நிகழ்வு அல்ல. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வாக நடைபெறக்கூடிய நிகழ்வுதான் இது. மாணவர்களுக்கும் விஜய்க்கும் இருக்கும் உறவு இயற்கையாகவே உள்ளது. அவர் சொன்னால் கேட்கக் கூடிய அளவிற்கு மாணவர்கள் உள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக் கழகம் வேகமாகப் பணியாற்றி வருகிறது. எல்லாவற்றையும் அரசியலாகவும் ஓட்டாகவும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு தொகுதியாகச் சென்று மக்களைப் பார்வையிடுவதற்கான திட்டம் உள்ளது. வெகு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். அது குறித்தான விவரங்களும் முறையாகத் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கமல்ஹாசனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற கேள்விக்கு, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்காக கமல்ஹாசன் தனது கட்சியை முடித்துவிட்டார் என்று காட்டமாக விமர்சித்தார்.
குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர்: கமல்ஹாசன்
தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் : கமல்ஹாசன்
வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள்: கமல்ஹாசன் அட்வைஸ்