பொன்னியின் செல்வன் 1 இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் மணிரத்னத்துடன் பணிபுரிந்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
நடிகர் கமலஹாசனுடன் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மேடையேறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழைய நினைவுகளை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டார்.
1991 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் நடித்த போது இயக்குனரிடம் ஒவ்வொரு காட்சி ஓ.கே. வாங்க பல டேக்குகள் நடிக்க வேண்டி இருந்ததாக குறிப்பிட்ட ரஜினிகாந்த்.
பயம், காதல், ஆச்சரியம், சந்தேகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த தனக்கு தெரிந்த அனைத்து விதத்திலும் வெளிப்படுத்தினாலும் மணிரத்னம் திருப்தியாகவில்லை என்று குறிப்பிட்டார்.
Thalaivar #Rajinikanth and his humorous Speech ❤😂
2010 – Thank U Aishwarya Ji
2022 – Thank U #Kamal.. @rajinikanth 👑 pic.twitter.com/tnjsVU2FGy— Raguvaran Karunakaran (@1991ragu) September 7, 2022
மணிரத்னம் படத்தில் 1987 ம் வெளியான நாயகன் படத்தில் நடித்த கமலுடன் இதுகுறித்து ஆலோசித்த ரஜினிக்கு அவர் கொடுத்த டிப்ஸ் தான் மணிரத்னத்தை திருப்திபடுத்த உதவியது என்று கூறினார்.
“ஒன்னும் பண்ணாதீங்க நீங்க நடிச்சு காமிங்கன்னு மணி சார் கிட்ட கேளுங்க, நடிச்சு காமிப்பாரு, அதை உள்வாங்கிக்கிட்டு கொஞ்ச நேரம் ஜோசிக்கிறமாதிரி பாவ்லா காமிச்சிட்டு அப்புறம் நீங்க நடிங்க ஓ.கே. ஆயிடும்னு கமல் சொன்னாரு” என்று தளபதி படத்தில் இயக்குனரிடம் நடித்து சமாளித்த விதம் குறித்து சுவாரசியமாக கூறினார் ரஜினிகாந்த்.