சென்னை: அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிய நடிகர் ரஜினிகாந்துடன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலுக்கு வருவதாக பல வருடங்களாக தனது ரசிகர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி வந்த ரஜினி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். தொடர்ந்து தனது ரசிகர்கள், விருப்பமான கட்சிகளில் இணைந்து பணியாற்றலாம் என்றும் கூறினார்.
இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள், சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என கூறி வந்தன. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் நண்பர் என்ற முறையில் ரஜினியை சந்தித்து ஆதரவு கோருவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ரஜினிகாந்துடன் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சுமார் 45 நிமிடம் ரஜினியுடன் கமல் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூடுதல் ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]