மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகர் ஒருவரை ஜூம் வீடியோவில் தொடர்புக் கொண்ட கமல், அவரிடம் உரையாடி மகிழ்வித்திருக்கிறார்.

சகேத்துடன் முழுதாக பத்து நிமிடங்கள் வீடியோ காலில் பேசிய கமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து மூளை புற்றுநோய்க்கு எதிராக போராடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த உரையாடலில் கண்ணீர், சிரிப்பு, புன்னகை என எல்லாமே இருந்தது. தனது மகனுக்கு விருமாண்டி என செல்ல பெயர் வைத்திருக்கும் விஷயத்தையும் சகேத் அப்போது வெளிப்படுத்தினார்.

இதனை சந்தியா வைத்தியநாதன் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர, உடனடியாக வைரலாகியதோடு, கமலுக்கு பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.