கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் ‘இந்தியன்’.
சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்தில், நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த், விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இதில் கமல்ஹாசனின் வயதான சேனாதிபதி தோற்றத்தில் வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றம் செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் . சேனாதிபதியாக வரும் கமல்ஹாசன் அந்த ஓட்டலுக்கு நடந்து செல்வது போன்ற காட்சியை படமாக்கியுள்ளனர் . தொடர்ந்து சில வாரங்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் அதன்பிறகு கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு செல்கிறார்கள் என்றும் வெளிநாட்டில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.