மூத்தவர்கள்தான் இன்ன மும் அரசியலை தோளில் தூக்சி சுமந்துக்கொண்டிருக்கின்றனர். ஆனா லும் பெரும்பாலான கட்சிகளில் இளைஞர் அணி என்ற அமைப்பு இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பிறகு இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். இன்று டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் இளைஞர்களுக்கான அழைப்பை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறும்போது,’சாவிலாக்கவி. நம் தமிழுடனும், வாழுவுடனும் நீக்கமறக் கலந்துவிட்ட முண்டாசுக்காரரின் கனவை நனவாக்குவோம் அரசியலில் இளையோரானாலும், தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை என்ற திரு சுப்ரமணிய பாரதியின் அக்கினிக்குஞ்சுகளாக மாறி புதிய அரசியல் சமைப்போம். வான்புகழ் தமிழகம் காண்போம்’ என தெரிவித் திருக்கிறார்.
விரைவில் கமல்ஹாசனின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

[youtube-feed feed=1]