விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன். இது நான்காவது சீசன் .
இந்த நிகழ்ச்சியின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமலஹாசன், வீட்டிலிருக்கும் ஹவுஸ் மேட்களை சந்திப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது, கமலஹாசன் அணிந்திருந்த உடையானது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அவர் அணிந்திருந்த உடையின் கை பகுதியில், மக்கள் நீதி மையம் கட்சியின் சின்னம் காணப்பட்டது, ரசிகர்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.