
பிரபல நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் கடந்த 13 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கமலைவிட்டு பிரிவதாக கவுதமி இன்று அறிவித்துள்ளார். தனது வலைப்பூவில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், கவுதமி, ” கமலுடன் சேர்ந்து வாழ்ந்த கடந்த 13 வருட வாழ்க்கை, மகிழ்ச்சியும், மனநிறைவும் அளித்தது. இந்க பந்தத்தில் இருந்து பிரிவது என்கிர முடிவு மிகவும்் சிரமமானது. அதே நேரம், எனது மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நானும் கமலும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதால் இதற்கு மேல் இணைந்து வாழ்வதில் அர்த்தமில்லை. கடந்து இரண்டு வருடங்களாகவே இந்த மனநிலையில் தான் இருந்து வந்தேன். என் வாழ்க்கையில் எடுத்த மிக கடுமையான முடிவு இது “, என்று கவுதமி தெரிவித்துள்ளார்.
கவுதமியின் இந்த முடிவுக்கு காரணமாக பலவித யூகங்கள் கிளம்பியுள்ளன. நடிகை ஒருவருடன் கமலுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டதாகவும், இதை கவுதமி விரும்பவில்லை என்றும் ஏற்கெனவே கிசுகிசுக்கள் அடிபட்டன. இந்த நிலையில் கவுதமியின் அறிவிப்பு அந்த கிசுகிசுவை ஊர்ஜிதப்படுத்துவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel