சென்னை
நிலவேம்பு பற்றி ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை தமது இயக்கத்தினரை நிலவேம்பு விநியோகிக்க வேண்டாம் என கமல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகம் எங்கும் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையின் கடுமையான நடவடிக்கைகளையும் மீறி இன்னும் டெங்கு பரவியபடியே உள்ளது. இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருவதால், சாதாரண காய்ச்சலுக்கும் மக்கள் பயந்து வருகின்றனர். இதற்கான சரியான மருந்து வகைகள் கண்டுபிடிக்கவில்லை என கூறி வரும் வேளையில் நிலவேம்பு குடிநீர் மூலம் டெங்கு குணமாகும் என ஒரு செய்தி பறவி வருகிறது. இதனால் பல அரசு மருத்துவமனையிலும், பல அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலும், தொண்டு நிருவனஙகளாலும் நிலவேம்பு குடிநீர் வினியோகம் நடை பெற்று வருகிறது.
இது குறித்து ஆராய வந்த மத்திய மருத்துவக் குழுவின் தலைவர் அசுதோஷ் பிஸ்வாஸ் நிலவேம்பினால் டெங்கு குணமாகும் என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என தெரிவித்தார். அதற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். நிலவேம்பு அனுபவ ரீதியாயாக டெங்குவை குணப்படுத்துவது நிரூபிக்கப்பட்டதாகவும், நிலவேம்பு குடிநீரில் 8 மூலிகைகள் சேர்க்கப்படுவதால் இது அங்கீகரிக்கப்படாத மருந்து என்பது தவறு எனவும் கூறி உள்ளார்.
தற்போது கமலஹாசன் தனது டிவிட்டர் பதிவில், ”நிலவேம்பு பற்றி சரியான ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை நமது இயக்கத்தினர் யாரும் நிலவேம்பு விநியோகம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.