
சென்னை,
தமிழக அரசு எதிர்த்து சமீபகாலமாக கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளிக்க பேட்டியில், முதல்வராக ஆசை என்று கூறியிருந்தார்.
அவரது முதல்வர் ஆசை குறித்து அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், பால் கலப்படம் புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக நடிக்கலாம் என்று கிண்டலடித்து உள்ளார்.
கோடிக்கணக்கான பணம் செலுத்தி திரைப்படம் எடுத்து அதில் நடிகர் கமல்ஹாசன் முதலமைச்ச ராக வரட்டும் என்றும், முதலில் அவர் தேர்தலை எதிர்கொண்டு கவுன்சிலராக வரச் சொல்லுங்கள் என்றும் கூறினார்..
நேற்று ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், தற்போதைய ஆட்சி கட்டாய தேர்தல் போல இருப்பதாகவும், தமிழக மக்கள் அதில் இருந்து மீள வேண்டும். அதிகாரத்தினால் மட்டுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்றால் அந்த அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் முதலமைச்சராக வரவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.:
[youtube-feed feed=1]